தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 10 மாவட்டங்களில் இன்று கனமழை

 10 மாவட்டங்களில் இன்று கனமழை

 10 மாவட்டங்களில் இன்று கனமழை


ADDED : ஜூன் 08, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:

நேற்று காலை, 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், அதிகபட்சமாக, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

கடலோர கர்நாடகம் முதல் கடலோர ஆந்திரா வரை, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

அதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us