தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை

ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை

ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘கோவை, தேனி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய, தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல், 0.9 கி.மீ., உயரத்தில், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல, மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை, வடதமிழகம் மற்றும் வடகேரளம் வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதையும் நிலவுகிறது. அதனால், இன்றும், நாளையும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம்.

திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us