தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை

 ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை

 ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை


ADDED : ஜூன் 12, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை:

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய கடலோர, ஆந்திரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில், சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us