ADDED : ஜூன் 09, 2026 06:02 AM

சென்னை: 'தமிழகத்தில் கோவை, நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 11 செ.மீ., மழை பெய்துள்ளது. கடலோர கர்நாடகா முதல், கடலோர கேரளா வரை, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
