தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை

 இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை

 இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை


ADDED : ஜூன் 29, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், இன்று பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதியில் இருந்து, குமரிக்கடல் பகுதி வரை, காற்றழுத்த தாழ்வுப்பாதை உருவாகி உள்ளது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முக்கியமாக, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்று 40 - 50 கி.மீ., வேக காற்றுடன், கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.

நாளை, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன், மணிக்கு 40 - 50 கி.மீ., வேகக் காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us