சென்னையில் வெளுத்து வாங்கியது கன மழை; அம்பத்தூரில் 13.4 செ.மீ., பதிவு
சென்னையில் வெளுத்து வாங்கியது கன மழை; அம்பத்தூரில் 13.4 செ.மீ., பதிவு
UPDATED : செப் 26, 2024 08:18 AM
ADDED : செப் 26, 2024 06:57 AM

சென்னை: சென்னை, திருவள்ளூர், போரூர், சைதாப்பேட்டை, வண்டலூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று(செப்.,25) இரவு பெய்த கனமழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரம்பூர், பட்டாபிராம் சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
திருவள்ளூர் பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடியில் 10செ.மீ., நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 7 செ.மீ., வில்லிவாக்கத்தில் 8 செ.மீ., எண்ணூரில் 5.4 செ.மீ செங்கல்பட்டில் 6 செ.மீ., மழைஅளவு பதிவாகியுளளது.
சென்னையில் மழை, மில்லி மீட்டரில்
ஆலந்தூர்- 49.4,
கீழம்பாக்கம்- 40,
தாம்பரம் - 37,
திருப்போரூர்- 21,
மாமல்லபுரம் -12,
அம்பத்தூர்- 134,
வானகரம்- 126,
மலர் காலனி-123,
மணலி- 99,
டி.வி.கே.நகர் - 94,
அண்ணா நகர் - 88,
கத்திவாக்கம்- 87 ,
அயனாவரம்- 87,
கொளத்தூர் - 83,
கோடம்பாக்கம்- 82,
புழல் - 79,
ராயபுரம்- 74,
நுங்கம்பாக்கம்- 74,
திருவொற்றியூர்- 74,
தொண்டையார்பேட்டை- 73,
சென்னை கலெக்டர் அலுவலகம்- 72,
ஐஸ் ஹவுஸ்- 70,
பெரம்பூர்- 70,
மாதவரம்- 69,
மதுரவாயல்- 65,
சோழிங்கநல்லூர்- 65,
உத்தண்டி- 62
அடையார்- 62
தேனாம்பேட்டை -59
முகலிவாக்கம்- 59
பெருங்குடி -58
வளசரவாக்கம்- 57

