சென்னை, வேலூர், கள்ளக்குறிச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை
சென்னை, வேலூர், கள்ளக்குறிச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை
ADDED : மே 08, 2024 08:03 AM

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், சென்னை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தனர். காலை 11 மணி முதல் மாலை 3:30 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இச்சூழ்நிலையில் இன்று (மே 08) அதிகாலை முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.
சென்னையில் அதிகாலை நேரத்தில் தரமணி, அடையாறு, கோட்டூர்புரம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
வேலூர் குடியாத்தம், மேல் ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
கள்ளக்குறிச்சியில், திருக்கோவிலூர், வீரபாண்டி, முகையூர், அரியூர், செட்டிங்தாங்கல், மணம்பூண்டி, அரகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
திருப்பத்தூரில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் கானை, கோலியனூர், முண்டியம்பாக்கம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம், ஜானகிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
திருவண்ணாமலையில் வேங்கிக்கால், ஆடையூர், செங்கிப்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சேலம் மேட்டூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இதனிடையே, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

