sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; இன்று 6 மாவட்டம், நாளை 4 மாவட்டங்கள்!

/

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; இன்று 6 மாவட்டம், நாளை 4 மாவட்டங்கள்!

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; இன்று 6 மாவட்டம், நாளை 4 மாவட்டங்கள்!

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; இன்று 6 மாவட்டம், நாளை 4 மாவட்டங்கள்!

2


ADDED : பிப் 21, 2026 01:52 PM

Google News

2

ADDED : பிப் 21, 2026 01:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அதன் அறிக்கை: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும். தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 21) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 22) கனமழை பெய்யக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இன்று (பிப்ரவரி 21) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us