இன்று 6, நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இன்று 6, நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
UPDATED : ஆக 07, 2025 02:25 PM
ADDED : ஆக 07, 2025 02:24 PM

சென்னை: திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 07) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 07) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நாகபட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 09) ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.