தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : ஜன 12, 2026 01:20 PM

சென்னை: கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
மேலும் வலுவிழந்து, மன்னார் வளைகுடா பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவியது. தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (ஜனவரி 01) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* அரியலூர்
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

