தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


UPDATED : நவ 22, 2026 11:00 PM

ADDED : நவ 22, 2026 06:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 11:00 PM ADDED : நவ 22, 2026 06:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'சென்னை உட்பட ஒன்பது மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், நாளை(நவ.23) இடி, மின்னலுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் வழியாக, கடலோர ஆந்திரா வரை, வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இதனால், அடுத்து வரும் நாட்களில், தமிழக கடலோர மாவட்டங்களில், மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கன மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us