தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

 நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

 நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு


ADDED : ஜூன் 05, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 02:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில், 9 செ.மீ., மழை பெய்தது.

தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில், சில இடங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலுார், செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில், இன்று முதல் ஜூன், 8 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us