ADDED : செப் 06, 2025 12:53 AM
சென்னை:'தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை மேடவாக்கத்தில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 5 செ.மீ., பள்ளிக்கரணை, கண்ணகி நகர், கோவை மாவட் டம் சோலையாரில், தலா 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, புதுக்கோட்டை, கடலுார், அரியலுார் ஆகிய ஏழு மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை முதல், 11ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங் களில் வரும் 8ம் தேதி, கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 9ம் தேதி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், 9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். சென்னையில் ஒரு சில இடங்களில், இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.