தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
ADDED : செப் 25, 2025 12:28 PM

சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களிலும், நாளை 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: வங்கக்கடலில், மியான்மர் கடலோர பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மியான்மரை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (செப் 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* நீலகிரி
* கோவை
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை (செப் 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* நீலகிரி
* கோவை
* தேனி
* தென்காசி
செப்., 27ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கோவை
* நீலகிரி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.