தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை: கலெக்டர்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை: கலெக்டர்
UPDATED : ஜன 06, 2024 04:13 AM
ADDED : ஜன 05, 2024 08:18 PM

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது : தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று ஜன.,6 கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .மேலும் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும்...
மருதூர், மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவித்து உள்ளார்.