தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
ADDED : ஜன 03, 2024 02:08 PM

சென்னை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை(ஜன.,04) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜன.,3 முதல் 7 வரை சூறாவளிக்காற்று வீசும். மீனவர்கள், மேற்கண்ட நாட்களில், இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.