தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/9 மாவட்டங்களில் நாளை கன மழை

9 மாவட்டங்களில் நாளை கன மழை

9 மாவட்டங்களில் நாளை கன மழை


UPDATED : நவ 23, 2026 07:05 PM

ADDED : நவ 23, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:05 PM ADDED : நவ 23, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'கடலுார் முதல் துாத்துக் குடி வரை, ஒன்பது மாவட்டங்களில் நாளை(நவ.24) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

தென் மேற்கு வங்கக்கடல் முதல், மத்திய மேற்கு வங்கக்கடல் வரை, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. வடக்கு கேரளா முதல் கர்நாடகா வரை, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us