தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்

 நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்

 நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்


ADDED : ஆக 05, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கோவை, தேனி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகம், புதுச்சேரியின் சில இடங்களில், நேற்று முன்தினம் மழை பெய்துள்ளது. அதனால், வெப்ப நிலையில், 2 -- 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைந்தது.

அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டவாக்கத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையே நிலவியது.

தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், 5.8 கி.மீ., உயரத்தில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

மேலும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் மேல், 5.8 கி.மீ., முதல் 7.6 கி.மீ., உயரம் வரை, ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

வட மாவட்ட கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

அதனால், இன்றும் நாளையும் கோவை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை.

விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங் களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்று டன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us