ADDED : ஜூலை 04, 2026 12:08 AM

சென்னை: 'கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங் களில், இன்று கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை நிலவரப் படி, வடமேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும்.
அதனால், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இம் மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தின் மற்ற இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும். மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
வெயில் தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் வழக்கமான வானிலையே தொடரும். வெப்பநிலை சற்று குறையவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
