தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சபரிமலையில் பலத்த மழை

சபரிமலையில் பலத்த மழை

சபரிமலையில் பலத்த மழை


ADDED : நவ 26, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் நடப்பு மண்டல கால சீசனில் நேற்று முதல் முறையாக இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

நவ., 17 ல் சபரிமலையில் மண்டல காலம் துவங்கிய நிலையில் காலநிலை சற்று உஷ்ணமாக இருந்தது. நேற்று முன்தினம் வானம் மந்தாரமாக காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. நேற்று காலையில் அதிக வெப்பத்துடன் வெயில் அடித்தது. மதியம் 3:00 மணிக்கு மேகமூட்டம் ஏற்பட்டது. மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மழை பலமாக பெய்ய தொடங்கியது. இதனால் மலையேறும் பக்தர்கள் சிரமப்பட்டனர். பக்தர்கள் நனைந்தபடி வந்து படி ஏறினர்.

பம்பை முதல் சன்னிதானம் வரை பாதையில் அனைத்து பகுதிகளிலும் கான்கிரீட் மற்றும் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளதால் வழுக்கல் எதுவும் இல்லாமல் மழையில் நனைந்தபடி பக்தர்கள் மலையறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us