நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை: அவலாஞ்சியில் 256 மி.மீ., பதிவு
நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை: அவலாஞ்சியில் 256 மி.மீ., பதிவு
UPDATED : மே 27, 2025 11:26 AM
ADDED : மே 27, 2025 09:02 AM

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 256 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை தொடர்வதால் ஊட்டி-மஞ்சூர், இத்தலார், எடக்காடு, ஊட்டி- கூடலுார் சாலை மற்றும் பந்தலுார் பகுதிகளில் நுாறாண்டு பழமை வாய்ந்த ஏராளமான மரங்கள் விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் துறையினர் இது போன்ற மரங்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிரம்பியது குந்தா அணை
குந்தா அணை முழு கொள்ளளவான 89 அடியை எட்டியது. வினாடிக்கு, 400 கன அடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. நேற்றிரவு இரண்டு மதகுகளில் தலா , 200 கன அடி வீதம் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களாக பெரும்பாலான கிராமங்களில் மின் தடை தொடர்வதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை, காய்கறி விவசாயம் செய்யும் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக மழை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்ல முடியவில்லை. சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
சுற்றுலா தலங்கள் அனைத்து தற்காலிகமாக மூடப்பட்டதால் வெறிச்சோடிய நிலையில் அப்பகுதிகளில் வியாபாரம் செய்து வந்தவர்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர். கடும் குளிர் வாட்டுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் மல்லி மீட்டர் பின்வருமாறு:
நீலகிரி மாவட்டம்
அவலாஞ்சி- 256
எமரால்ட் -132
குந்தா-110
அப்பர் பவானி 123
குந்தா பாலம் 109
வென்ட்ஒர்த் 100
சேர்முள்ளி 80
பந்தலூர் 77
சாம்ராஜ் எஸ்டேட் 76
நடுவட்டம் 71
பார்வுட் 59
அப்பர் கூடலூர் 58
தேவாலா 55
கூடலூர் பஜார் 54
கிளன்மார்கன் 46
கன்னியாகுமரி மாவட்டம்
அடையாமடை 78.2
சுருளக்கோடு 71.4
பாலமோர் 69.4
பெருஞ்சாணி 58.8
மாம்பழத்துறையாறு 58.2
புத்தன் அணை 57.8 ஆணைக்கிடங்கு 57.2
கோழிப்போர்விளை 55.4
சித்தார் 53.4
திற்பரப்பு 50
பேச்சிப்பாறை 45.4
முள்ளங்கினாவிளை 42.6
முக்கடல் அணை 41
மைலாடி 40.2
தக்கலை-37
குளச்சல் -37
குருந்தன்கோடு 36.4
குழித்துறை 35.4
நாகர்கோவில் 34.2
கோவை மாவட்டம்
சின்னக்கல்லாறு 116
சிறுவாணி அடிவாரம் 86
சின்கோனா 70
சோலையார் 61
வால்பாறை பிஏபி -58
வால்பாறை தாலுகா ஆபீஸ் 55
மாக்கினாம்பட்டி 44.6
ஆனைமலை 39
பொள்ளாச்சி 28.4
கிணத்துக்கடவு- 26
தேனி மாவட்டம்
சோத்துப்பாறை 16
கூடலூர் 15.6
உத்தமபாளையம் 13.2
பெரியார் 10.1
போடிநாயக்கனூர் 7.4
அரண்மனைபுதூர் 7.2
மஞ்சளாறு 6 ஆண்டிபட்டி 6
வைகை அணை 5.6
வீரபாண்டி 3.6