தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மின்சார வாகனங்களுக்கு  ‛'சார்ஜிங்' நிலையம் துவக்குவது எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

 மின்சார வாகனங்களுக்கு  ‛'சார்ஜிங்' நிலையம் துவக்குவது எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

 மின்சார வாகனங்களுக்கு  ‛'சார்ஜிங்' நிலையம் துவக்குவது எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

1


ADDED : ஆக 05, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 03:32 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மின்சார வாகனங்களுக்குரிய 'சார்ஜிங்' நிலையங்கள் எப்போது துவக்கப்படும் என்பது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.

மதுரை கதிர் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் ஆண்டுதோறும் 10 கோடி டன் கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றுகின்றன. மின்சார வாகனங்கள் புகையை உருவாக்குவதில்லை. சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கிறது. மின்சார வாகன பயன்பாட்டுக்குரிய இலக்குகளை எட்டினால், 2050 ல் கார்பன் வெளியேற்றத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என சர்வதேச துாய்மையான போக்குவரத்து கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது. இந்தியா கச்சா எண்ணெயில் பெரும் பகுதியை இறக்குமதி செய்கிறது. மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறினால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா ஆண்டுதோறும் செலவிடும் அதிக தொகையை சேமிக்க முடியும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது.

மதுரை முதல் தென்காசி வரையிலான நான்கு வழிச்சாலையில் பொதுத்துறையின் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.

சிலவற்றில் மின்சார வாகனங்களுக்கான 'சார்ஜிங் பாயின்ட்' (மின்னேற்ற நிலையம்) நிறுவப்பட்டுள்ளன. இவை செயல்படவில்லை.

இதனால் தனியார் நிறுவனங்களிலுள்ள 'சார்ஜிங் பாயின்ட்'டுகளை வாகன ஓட்டிகள் நாட வேண்டியுள்ளது. அங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செயல்படாத சார்ஜிங் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவற்றை கண்காணிக்க மின்வாரியம், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். மதுரை, திருச்சி, திருநெல்வேலி மத்திய சிறைகளில் கைதிகளால் பெட்ரோல் நிலையங்கள் நடத்தப்படுகின்றன.

இவற்றில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் வசதியை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மின்சார வாகனங்களுக்குரிய சார்ஜிங் நிலையங்கள் எப்போது துவக்கப்படும் என்பது குறித்து ஐ.ஓ.சி.,மற்றும் பி.பி.சி.எல்., நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் ஆக.19 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us