போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 08, 2026 12:31 AM

மதுரை: போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஒரு சிறுமியை கட் டாயப்படுத்தி திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். சிறுவனுக்கு சம்பந்தப்பட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி என்.மாலா விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: பாதிக்கப் பட்ட பெண் தன்னுடன் காதல் வயப்பட்டார். இது அவரது வாக்குமூலங்களில் தெளிவாகிறது. முதலில் அளித்த வாக்குமூலங்களில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. பின்னர், அவர் அளித்த வாக்குமூலத்தில் முன்னுக்குப்பின் முரணாக கருத்து தெரிவித்தார். அப்பெண் தன்னிச்சையாக, சுய விருப்பத்தின் அடிப்படையில் தன்னுடன் வந்ததை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. எவ்வித ஆதாரமும் இன்றி கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கை முடிப்பதற்கு முன், இதை வழக்கமான ஒருமித்த இளம்பருவ பாலியல் உறவு சம்பந்தப்பட்ட வழக்காக இந்நீதிமன்றம் கருதுகிறது. இது பெற்றோரின் கருத்து வேறுபாடு காரணமாக கசப்பான முடிவுக்கு வந்துள்ளது. இளம்பருவத்தினரிடையேயான ஒருமித்த உறவு சம்பந்தப் பட்ட வழக்குகளில், பெரும்பாலும் இளம் சிறுவனே இறுதியில் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.
பெற்றோரின் அழுத்தம் காரணமாக வேறொருவரை திருமணம் செய்து கொள்ள சிறுமி நிர் பந்திக்கப்படலாம். அதைத் தொடர்ந்து சிறு வனுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் துவங்கப்படுகிறது. நீண்டகாலம் சிறுவன் சிறையில் இருக்க நேரிடுகிறது.
டில்லி உயர்நீதிமன்றம், 'சிறுவர்களின் காதலுக்கு எதிராக சிறுமியின் குடும்பத்தினரின் துாண்டுதலின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்வது பொதுவான நிகழ்வாக மாறி யுள்ளது. இதன் விளைவாக சிறுவர்கள் சிறைகளில் வாடுகின்றனர்,' என குறிப்பிட்டுள்ளது.
சில வழக்குகள் அடிப் படையில் உச்சநீதிமன்றம், போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகிறது. இப்பிரச்னையை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சட்டத்துறை செயலருக்கு தீர்ப்பின் நகலை அனுப்ப வேண்டும். இச்சட்டத்தை பயன்படுத்தி பழிவாங்கும் நோக்கில் தவறாக வழக்கு தொடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வழிமுறைகளை உருவாக்க வேண்டும்,' என அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதுபோல், போக்சோ சட்டம் மற்றும் அதன் விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இப்பிரச்னையை கட்டுப்படுத்த உதவும் என இந் நீதிமன்றம் கருதுகிறது.
இச்சட்டம் குறித்து போதிய தெளிவு இல் லாததே, அது தவறாக பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணம்.
போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் மட்டு மன்றி, பள்ளிகள், கல் லுாரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதை தமிழக தலைமைச் செயலர் பரிசீலிக்க வேண்டும். இதனடிப் படையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஜூன் 3ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர விட்டார்.

