sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேவர் ஜெயந்தியின்போது கொலைகள் விசாரணை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

/

தேவர் ஜெயந்தியின்போது கொலைகள் விசாரணை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

தேவர் ஜெயந்தியின்போது கொலைகள் விசாரணை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

தேவர் ஜெயந்தியின்போது கொலைகள் விசாரணை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

1


ADDED : பிப் 23, 2024 06:41 AM

Google News

ADDED : பிப் 23, 2024 06:41 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 2012ல் தேவர் ஜெயந்தி கொண்டாட பசும்பொன் சென்றபோது நடந்த வெவ்வேறு கொலைகள் தொடர்பாக எமனேஸ்வரம், பரமக்குடி டவுன் போலீசார் பதிவு செய்த வழக்குகளின் விசாரணையை ராமநாதபுரம் நீதிமன்றத்திலிருந்து மதுரை நீதிமன்றத்திற்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

2012 அக்.,30 ல் பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியில் பங்கேற்க சிலர் வாகனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்புவிழுந்தான் வழியாகச் சென்றனர். சிலர் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். டிரைவர் சிவகுமார் சம்பவ இடத்தில் இறந்தார். சிலர் காயமடைந்தனர். எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதுபோல் 2012 அக்.,30 ல் பண்ணையார்புரம் அருகே டூவீலரில் சென்ற மலைக்கண்ணன், வீரமணியை சிலர் சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடி தாக்கினர். வீரமணி சம்பவ இடத்தில் இறந்தார். பரமக்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். இரு வழக்குகளின் விசாரணை ராமநாதபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. இரு வழக்குகளில் சாட்சியாக சேர்க்கப்பட்ட பரமக்குடி பாண்டிதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

குற்றம் சாட்டப்பட்ட நபர்களால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ராமநாதபுரம், மற்றொருவர் பரமக்குடியில் வழக்கறிஞர் தொழில் செய்கின்றனர். இதனால் அனைத்து அரசு தரப்பு சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறுகின்றனர். இரு வழக்குகளின் விசாரணையை ராமநாதபுரம் நீதிமன்றத்திலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஆர்.ேஹமலதா:

இதுவரை 11 சாட்சிகளிடம் விசாரணை நடந்ததில் 10 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். மனுதாரர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ராமநாதபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் துவக்கத்தில் தெரிவித்தது வாக்குமூலத்தை ஆய்வு செய்ததில் தெரிகிறது. இதை அந்நீதிபதி பதிவு செய்திருந்தாலும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அனைத்து சாட்சிகளின் சாட்சியங்களையும் இயந்திரத்தனமாக பதிவு செய்துள்ளார். அந்நீதிமன்ற விசாரணைக்கு இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி ஜி.இளங்கோவன் தடை விதித்தார். இது ஏற்புடையதே.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ராமநாதபுரம், மற்றொருவர் பரமக்குடியில் வழக்கறிஞர் தொழில் செய்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பரமக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் சர்ச்சைக்குரியதல்ல. இது இரட்டைக் கொலை வழக்கு; தீவிரமான குற்ற வழக்கு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை கொண்டாட சென்றவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். சம்பவம் நடந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 3 ஆண்டுகளாகியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் ராமநாதபுரம் நீதிமன்ற விசாரணைக்கு 40 கி.மீ.,பயணம் செய்கின்றனர். இறந்தவர்கள் சிவகங்கையைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும். எனவே சிவகங்கை நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற முடியாது. நியாயமான விசாரணையை நடத்துவதில் அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை பாதுகாக்க ராமநாதபுரம் முதன்மை அமர்வு நீதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. இதன் விளைவாக, அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்டனர்.

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இரு வழக்குகளும் மதுரை முதன்மை நீதிமன்ற நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்படுகிறது. ஆவணங்களை பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us