முன்னாள் அமைச்சர் மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு; ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
முன்னாள் அமைச்சர் மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு; ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஏப் 05, 2025 06:16 PM

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மனைவி மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த அஜிதா இருந்தார். இவர் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி. இவர் நாகர்கோயிலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்கிய சிங் என்பவரது நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து, சரவண பிரசாத் குமார் என்பவருக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நாகர்கோயில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், அஜிதா, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, அஜிதா சார்பபில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன், அஜிதா கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.