சகோதரர் இறுதிச் சடங்கில் பங்கேற்க தளபதிக்கு ஐகோர்ட் கிளை அனுமதி
சகோதரர் இறுதிச் சடங்கில் பங்கேற்க தளபதிக்கு ஐகோர்ட் கிளை அனுமதி
ADDED : ஜூலை 30, 2011 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தி.மு.க., நகர செயலர் தளபதியின் சகோதரர் பிரபுவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, மூன்று நாட்கள் அனுமதி வழங்கி, ஐகோர்ட் கிளை நேற்று உத்தரவிட்டது.
நில அபகரிப்பு வழக்கில், தளபதி பாளை சிறையில் உள்ளார். அவரது இளைய சகோதரர் பிரபு. திருப்பரங்குன்றத்தில், குடும்பத்துடன் பிரபு வசித்தார்; சன்னிதி தெருவில் தங்கும் விடுதி நடத்தி வந்தார்; மஞ்சள் காமாலை நோயால், நேற்று முன்தினம் இறந்தார்.
சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, ஐந்து நாட்கள் அனுமதி கேட்டு, தளபதி சார்பில், வழக்கறிஞர் ஜெகநாதன், ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். தளபதிக்கு, இன்று முதல் ஆக.,1 வரை அனுமதி வழங்கி, நீதிபதி ஆர்.மாலா உத்தரவிட்டார்.