உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 25, 2026 03:32 AM

அ நிறம் | அளவு
சென்னை: ஊதிய முரண்பாடு நீக்கக் கோரியும், வடகிழக்கு பருவ மழைக்கு முன் சாலைகள் சீரமைப்பு பணிக்கு போதிய நிதி ஒதுக்கக் கோரியும், தமிழக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை கிண்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சங்க பொதுசெயலர் வீரமணி, துணைத் தலைவர் பாண்டியன், பொருளாளர் தியாகராஜா ஆகியோர் கூறியதாவது:
ஆறாவது ஊதியக் குழுவின் ஒருநபர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதிய பரிந்துரைகளை, ஏழாவது ஊதியக் குழுவில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பொது மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
