ADDED : ஆக 31, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், அன்புமணி திண்டிவனத்தில் நாளை நடைபயணம் மேற்கொள்கிறார்.
'உரிமையை மீட்க... தலைமுறை காக்க' என்ற தலைப்பில், மாலை 6:00 மணிக்கு இந்த நடைபயணம் நடைபெறுகிறது.
இதற்காக, அன்புமணி ஆதரவாளர்கள் ஏராளமான பேனர்களை வைத்துள்ளனர். அவற்றில், அன்புமணி படத்துடன் ராமதாஸ் படமும் பிரதானமாக இடம் பெற்றுள்ளது.

