UPDATED : ஜூலை 20, 2011 05:05 PM
ADDED : ஜூலை 20, 2011 04:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வந்துள்ள அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
அப்போது ஹிலாரி முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை வந்துள்ள ஹிலாரிக்கு முதல்வர் வரவேற்பு தெரிவித்தார். சந்திப்பின் போது, இலங்கை தமிழர் விவகாரம் பற்றி ஹிலாரியுடன் ஜெ., ஆலோசனை செய்ததாகவும், தமிழகத்தில் தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.