தர்மஸ்தலா கோவில் விவகாரத்தை திசை திருப்ப காங்., -- -எம்.பி., நாடகம் ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
தர்மஸ்தலா கோவில் விவகாரத்தை திசை திருப்ப காங்., -- -எம்.பி., நாடகம் ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
ADDED : செப் 02, 2025 05:10 AM
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர், கோவில் வளாகத்தினுள், நுாற்றுக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக போலீசில் புகார் அளித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில், அந்த புகார் பொய் என தெரிந்ததும், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், கர்நாடகாவில் ஆளும் காங்., அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்ததில், எதுவும் கிடைக்கவில்லை. தர்மஸ்தலா கோவிலின் புனிதம், புகழைக் கெடுக்க திட்டமிட்டு சதி நடந்துள்ளது.
இதில், திருவள்ளூர் தொகுதி காங்., - -எம்.பி., சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்குள்ளதாக, கர்நாடக பா.ஜ., - -எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், 'தமிழகத்துக்கு கல்வி நிதி தராத மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம்' என்ற நாடகத்தை சசிகாந்த் செந்தில் துவக்கியுள்ளார்.
தமிழக காங்., தலைவர்கள் கூட இது பற்றி பேசாதபோது, தன்னிச்சையாக சசிகாந்த் செந்தில் போராட்டம் துவங்கியது, தர்மஸ்தலா கோவில் விவகாரத்தை திசை திருப்பவே என்பது அப்பட்டமாக தெரிகிறது.
தர்மஸ்தலா பகுதியில் உள்ள பழங்குடி, மலைவாழ் மக்களை மத மாற்றம் செய்யும் முயற்சியாகவே இதை கருத வேண்டி உள்ளது. சபரிமலை, திருப்பதியில் பல குழப்பங்களை உருவாக்கிய மத மாற்ற சக்திகள், இதிலும் களம் இறங்கியுள்ளன. எனவே, தர்மஸ்தலா விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

