கோவிலுக்கு தானம் அளித்த காளை - கன்றை திருடி கசாப்பு ஹிந்து முன்னணி கண்டனம்
கோவிலுக்கு தானம் அளித்த காளை - கன்றை திருடி கசாப்பு ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : நவ 02, 2025 01:26 AM
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட காளை மாட்டையும், கன்று குட்டியையும் ஒருவர் திருடி சென்றது அதிர்ச்சியளிக்கிறது.
மாற்று மதத்தை சேர்ந்த அந்நபர், காளை மற்றும் கன்றை வெட்டி, கூறு போட்டு மாமிசமாக விற்றார். இவரை போன்றவர்களின் செயல்கள் தான், மத மோதலை உருவாக்குகின்றன.
அந்த நபர், கோட்டை மாரியம்மன் கோவிலுக்குள் அடிக்கடி சென்று, காளை மாட்டுக்கு உணவளிப்பது போல் நோட்டமிட்டு திருடி உள்ளார். அவற்றை தானமாக கொடுத்தவர் பார்க்க சென்றபோது தான், இந்த திருட்டு தெரிந்திருக்கிறது.
அவர் போலீசில் புகார் அளித்து, தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், திருடிய நபரை கண்டுபிடிக்கவில்லை.
கோவிலுக்கு தானமாக வழங்கும் மாடுகள், மின்சாதனங்கள், பணம், நிலம், நகை என எவையாக இருந்தாலும், நாங்கள் பாதுகாக்கிறோம் என அறநிலையத்துறை மார்தட்டி கொள்கிறது.
ஆனால், மாடு தானமாக கொடுத்தவர் புகார் அளிக்கும் வரை, அறநிலையத்துறை கண்டும் காணாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

