ADDED : ஜன 18, 2024 03:43 AM

திண்டிவனம்: இரு சமூகத்தினரி டையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் முகநுாலில் பதிவிட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நவாப் மஸ்ஜித் தலைவர் அஜ்மல் அலி மற்றும் அனைத்து பள்ளி வாசல், முத்தவல்லிகள், ஜமத்தார்கள் சார்பில் திண்டிவனம் போலீசில் நேற்று மதியம் புகார் அளித்தனர்.
அதில், ''திண்டிவனத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, இந்து, முஸ்லீம் மக்களிடையே விரோத்தை துாண்டும் வகையில், அமைதியை சீர் குலைக்கும் வகையில் தனது முகநுாலில் கடந்த 16 ம் தேதி பதிவிட்டிருந்தார்.
இரு சமூகத்தினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் முகநுாலில் வெளியிட்டுள்ள பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுவை நேற்று இரவு கைது செய்தனர்.