ADDED : ஜன 22, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: கடவுள் ராமர் குறித்து அவதூறு பரப்பிய ஆதித்தமிழர் பேரவை நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி ஹிந்து முன்னணி மாநில நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியை சேர்ந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி கலைக்கண்ணன் என்பவர் ராமபிரான் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறு கருத்து தெரிவித்திருந்தார். போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் திருநெல்வேலி டவுன் வாகையடிமுனையில் ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போலீஸ் அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை கைது செய்தனர்.