உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 29, 2026 09:46 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நாள், இந்திய சரித்திரத்தில் இடம் பெறும் நாள். ஹிந்துக்களை அடக்க நினைத்தனர்; ஆனால், ஒருபோதும் அடக்க முடியாது. எங்கள் உரிமையை பெற்றிருக்கிறோம். ஹிந்து மத உணர்வை கூட, வெளியே கொண்டு வர முடியாத அளவுக்கு, ஹிந்து மதத்தை பற்றி பேசினாலே மதச்சாயம், மத வேறுபாடு என கூறினர்.
சூரனை சம்ஹாரம் செய்ததைப் போல, முருகப்பெருமான் இப்போது செய்திருக்கிறார். எதிர்த்தவர்கள் கூட நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஹிந்து மதத்தின் பாரம்பரியம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை, தமிழக அரசு மதிக்கவில்லை; மக்கள் மதித்திருக்கிறார்கள், ஆன்மிகம் மதித்திருக்கிறது. இனி மதத்தின் பெயரைச் சொல்லி எங்களை ஒடுக்குவதோ, அடக்குவதோ, வேறுபடுத்துவதோ நடக்காது.
– தமிழிசை
மூத்த தலைவர், பா.ஜ.,
