ADDED : நவ 10, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறநிலையத்துறையின் கீழ், கோவில் நிர்வாகம் வந்த பின், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் காணாமல் போய் விட்டன. கோவில் நிலம், குளங்கள் உள்ளிட்டவை அரசுக்கு தாரைவாக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஏராளமான சொத்துக்கள் இருந்தும் 17 ஆயிரம் கோவில்களில் ஒரு கால வழிபாட்டுக்கு கூட வழியில்லை. இந்த அவலத்தை, வெட்கமே இல்லாமல், அறநிலையத்துறையே, கோர்ட்டில் அளித்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான கோவில்கள் சீரழியும் நிலையில், கோவில் நிதியில் கல்லுாரி கட்ட, தமிழக அரசு மசோதா நிறைவேற்றுவது, எந்த அளவுக்கு மோசடியானது? இதுபோல, கரூர், தாந்தோணிமலை கோவில் நிலம் பிளாட் போடப்பட்டுள்ளது. கோவில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்வது தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், கோவில் நிலம் குத்தகை, வாடகை பாக்கி குறித்து, கோவில் வாசல்களில் பதாகைகள் வைக்கப்பட்டன. இப்போது, இவை மூடி மறைக்கப்படுவதில் சதி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. - காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி

