'ஹிந்துத்துவா, கார்ப்பரேட் கூட்டணி போராடி தோற்கடிக்க வேண்டும்': பிரகாஷ் காரத்
'ஹிந்துத்துவா, கார்ப்பரேட் கூட்டணி போராடி தோற்கடிக்க வேண்டும்': பிரகாஷ் காரத்
ADDED : ஏப் 03, 2025 06:24 AM

மதுரை : பா.ஜ. ஆளாத மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது, என மதுரையில் துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூ., 24வது அகில இந்திய மாநாட்டில், அக்கட்சி அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
மாநாட்டில் பிரகாஷ் காரத் பேசியதாவது:
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோர் நெருங்கிய நண்பர்களாகவும் கூட்டணி அமைத்தும் செயல்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., அங்கமாக பா.ஜ., செயல்படுகிறது.
இக்கூட்டணி தான் நாட்டில் ஹிந்துத்துவா - கார்ப்பரேட் உறவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன்மூலம் கருத்தியல், கலாசாரம், சமூக துறைகளில் ஹிந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை போராடி தோற்கடிக்க வேண்டும்.
பா.ஜ., ஆளாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், திரிபுரா மாநில மாணிக்க சர்கார், கட்சியின் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பிருந்தா காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

