ADDED : மார் 14, 2024 03:58 AM

பி.சிவ அன்பு ஷர்மா மதுரை யில் இருந்து எழுதுகிறார்:
'எம்.ஜி.ஆரைப் போல், அமைச்சர் உதயநிதியை, தமிழக மக்கள் பார்க்கின்றனர்' என, தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி கூறுகிறார். அவர் கூறுவது தவறு. யாரை யாருடன் ஒப்பிட்டு பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.
அனைத்து மொழி, மதம் கட்சிக்கு அப்பாற்பட்டு போற்றப்பட வேண்டியவர், தமிழகத்தின் தனக்கு என்று ஒரு இடம் வகித்து முதல்வராக பல ஆண்டுகளாக பதவி வகித்தவர், எம்.ஜி.ஆர்.,
அனைத்து மதத்தினரை யும் அன்பாக அரவணைத்து சென்றவர். அத்தகைய பெரியவரை உதயநிதியுடன் ஒப்பிட்டு பேசுவது தவறு.
உதயநிதி, 'நான் கிறிஸ்துவன் என்பதில் பெருமை யாக இருக்கிறது. நான் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்துள்ளேன். சனாதனம் ஒழிக்க போராடி வருகிறேன்' என்று கூறுவதும், பின், 'நான் ஒரு நாத்திகவாதி' என்று கூறுவதும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கப்படி பேசி வருவதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.
'உதயநிதி காரில் வரும் போது எம்.ஜி.ஆரை பார்த்த மாதிரி மக்கள் வரிசையில் இருந்து பார்க்கின்றனர்' என, பாரதி கூறுவது, சிரிப்பை வரவழைக்கிறது. இது காசுக்கு சேர்த்த கூட்டம்.

