3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என உத்தரவு
3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என உத்தரவு
UPDATED : டிச 14, 2024 07:02 AM
ADDED : டிச 14, 2024 06:53 AM

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் நடத்தக் கூடாது' என மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று அடைமழை வெளுத்து வாங்கியது. இதனால், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் நேற்றிரவும், கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையே, வங்கக்கடலில் நாளை (டிச.,15) மீண்டும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு- வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை காரணமாக, தேனி, சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் நடத்தக் கூடாது' என மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

