பல்லடத்தில் கல்லுாரி மாணவி ஆணவ கொலை; விசாரணையில் அம்பலம்!
பல்லடத்தில் கல்லுாரி மாணவி ஆணவ கொலை; விசாரணையில் அம்பலம்!
ADDED : ஏப் 02, 2025 08:48 AM

திருப்பூர்: திருப்பூர் பல்லடத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்பிறந்த தங்கையை அண்ணனே ஆணவக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. வெல்டிங் வேலை செய்து வருகிறார். அவரின் மனைவி விசைத்தறி தொழிலாளி. தம்பதிக்கு வித்யா என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். வித்யா கோவையில் உள்ள அரசு கல்லுாரியில் எம்.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த, 30ம் தேதி பெற்றோர் சர்ச்சுக்கு சென்றனர். அவரது அண்ணன் வெளியில் சென்ற நிலையில், வித்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். பெற்றோர் மதியம் வீட்டுக்கு திரும்பிய போது, வித்யாவின் மீது பீரோ சரிந்து விழுந்து இருந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் இருந்தார். உடனே, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து பார்த்த போது வித்யா இறந்தது உறுதி செய்யப்பட்டது. வித்யாவின் சடலத்தை தோண்டியெடுத்து, மயானத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவியை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணனே ஆணவக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் செய்ததால் தங்கையை அண்ணன் கொலை செய்துள்ளான்.