ADDED : டிச 05, 2024 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில், தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, 12க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், மூன்று பேர் மட்டுமே உள்ளனர்.
அதுபோல, மருந்து கட்டுபவர்கள், துப்புரவு பணியாளர்கள் பணியிடமும் காலியாக இருப்பதால், மின்தடை ஏற்படும் நேரத்தில் ஜெனரேட்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கீழப்பசலையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சைக்கு வந்தார். அப்போது, மின்சாரம் இல்லாததால் மொபைல் போன் லைட் வெளிச்சத்தில் ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
இங்குள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.