ADDED : நவ 28, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் ஓசூர் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஓசூர் விமான நிலையத்திற்கு இட அனுமதி கேட்டு, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் சமீபத்தில் விண்ணப்பித்தது.
தற்போது, ஓசூர் விமான நிலைய கட்டுமான பணிக்கு, விரிவான தொழில்நுட்ப பொருளாதார திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகரை தேர்வு செய்ய, டிட்கோ, 'டெண்டர்' கோரியுள்ளது.

