ADDED : மார் 12, 2026 01:46 AM
சென்னை: ஹோட்டல்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், தமிழகத்தில் பல டீ கடைகள், சிறு உணவகங்கள் நேற்று முதல் மூடப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று நடத்திய பேச்சில், 'மின் அடுப்புகளுக்கு மாறுவதற்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க, மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்' என, ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் எதிரொலியாக, ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு வணிக சிலிண்டர் வினியோகத்தை, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 9ம் தேதி முதல் நிறுத்தியுள்ளன.
இதனால், தமிழகத்தில் நேற்று முதல் பல டீ கடைகள், சிறிய உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. நடுத்தர, பெரிய ஹோட்டல்கள், மின் அடுப்பு, விறகு அடுப்பு என, மாற்று எரிபொருளுக்கு மாறி வருகின்றன.
ஆலோசனை இந்த விவகாரம் தொ டர்பாக, ஹோட்டல், தொழில் நிறுவனங்களின் கருத்துகளை கேட்டறிய, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அரசு உயரதிகாரிகள், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சென்னை ஹோட் டல் சங்க தலைவர் ரவி கூறியதாவது:
அமைச்சர் நடத்திய கூட்டத்தில், 'ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கேட்கப்பட்டுள்ளது; அது கிடைத்ததும் சிலிண்டர் வினியோகம் சீராகும்' என, எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹோட்டல்களில் மின் அடுப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால், காலை, மாலையில் மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும், உச்சநேர மின் பயன்பாட்டு கட்டணத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினோம்.
காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஹோட்டல் உரிமையாளர்கள் நேரடியாக வாங்க அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:
தமிழகத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்க னவே கடிதம் எழுதியுள்ளார்.
ஆர்டர் வீட்டு காஸ் சிலிண்டர்களுக்கு, 25 நாட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், வணிக சிலிண்டரை நிறுத்தி உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
'திருமணத்திற்கு பலர், ஆர்டர் கொடுத்துள்ளனர். எரிவாயு இல்லாததால் சமைக்க முடியவில்லை. உடனடியாக விறகு அடுப்பு பயன்படுத்த
தொடர்ச்சி 7ம் பக்கம்

