தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அந்துமணி பதில்கள் – 19.10.2026

அந்துமணி பதில்கள் – 19.10.2026

அந்துமணி பதில்கள் – 19.10.2026


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ.நிலா, நீலகிரி:

‘பள்ளிகளில் வாரத்தில் மூன்று நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதே?

பள்ளி மாணவர்கள் குதுாகலிப்பர். அவர்களது ஆரோக்கியம் மேம்படும்; மூளையும் சுறுசுறுப்படையும். நல்லது தானே!

சங்கை சங்கர நாராயணன், சென்னை:

‘கரப்பான் பூச்சி கட்சிக்கு அமெரிக்க நிதி வருகிறது’ என போட்டு உடைத்த பிரபல பாடகி மேரி வில்பென் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரப்பான்களின் செய்கையை மாற்ற என்ன வழி?

இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரும், ‘நாம் இந்தியன், நம் நாட்டின் வளர்ச்சியே நம் முன்னேற்றம்’ என்பதை உணர்ந்து செயல்பட்டு, கரப்பான்களை பூண்டோடு அழிக்க வேண்டும். இல்லையென்றால், நம் நாடு பயங்கரவாதிகளின் கைக்கு சென்று விடும்.

கார்ட்டூன் உண்டு

ஏ.மணிகண்டன், விழுப்புரம்:

அரசு அதிகாரிகள் தங்கள் தொடர்பில் இருப்பதாக ராகுல் கூறுகிறாரே?

அப்படியே அவர்கள் பெயரையும் ராகுல் கூறிவிட்டால், நம் பிரதமர், அவர்களை தொடர்பு எல்லைக்கு அப்பால் வைத்து விடுவாரே!

ஏ.அனந்தகிருஷ்ணன், தேனி:

இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், தேர்தலை சந்தித்தால் எத்தனை இடைத்தேர்தல் வந்தாலும் கட்சியினருக்கு நஷ்டம் இல்லையே?

அது சரி... ஆனால், தேர்தல் நடத்துவதற்கு, மக்கள் வரிப்பணம் தானே செலவிடப்படுகிறது!

கார்ட்டூன் உண்டு

பி.அனுமந்தரா, சென்னை:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில், தேர்தல் பொறுப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்ட, ஜெகத்ரட்சகனால், தி.மு.க.,வை வெற்றிபெற செய்ய முடியவில்லை. இதில் புதுச்சேரி மாநில முதல்வராகும் கனவில், புதுச்சேரியையே சுற்றி சுற்றி வருகிறாரே ஜெகத்?

வெறும் தோல்வி இல்லை அனுமந்தரா, வரலாறு காணாத ‘டிபாசிட் காலி’ நிலை. ஆனால் அவர் புதுச்சேரியை சுற்றி வருவது, அங்கு செய்திருக்கும் முதலீட்டுகளை வளர்க்கவே தவிர, கட்சியை வளர்க்க அல்ல!

கோப்பெருந்தேவி, சென்னை:

வாழ்க்கையில் போராட்டம் என்றால் எதிர்த்து போராடலாம். வாழ்க்கையே போராட்டம் என்றால் என்ன செய்யலாம்?

தெருவில் நடக்கும்போது தெரு நாய் துரத்தினால், கையில் கல்லுடன் அல்லது கட்டையுடன் அதை திரும்பி பாருங்கள்; அது ஓடி விடும். அதேபோல் போராட்டத்தை பார்த்து, ‘என்னிடமா வருகிறாய்?’ என, மன தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள்; அவை ஓட்டம் பிடித்து விடும், கோப்பெருந்தேவி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us