உள்ளடக்கத்திற்கு செல்ல

'ஆன்லைன்' முறையில் வீடு ஒதுக்கீடு: அமைச்சர் உத்தரவு
'ஆன்லைன்' முறையில் வீடு ஒதுக்கீடு: அமைச்சர் உத்தரவு
ADDED : ஜூலை 02, 2026 12:06 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடு, மனை தொடர்பான, அனைத்து ஒதுக்கீடுகளையும், 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ள வேண்டும்' என, வீட்டுவசதி துறை அமைச்சர் ராஜ் குமார் உத்தர விட்டார்.
வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் ராஜ்குமார் பேசியதாவது:
வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடு, மனை ஒதுக்கீடுகள், வெளிப்படையாக நடக்க வேண்டும் என, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, வாரிய திட்டங்களில் வீடு, மனை விற்பனையில், ஒதுக்கீடுகள் அனைத்தையும், 'ஆன்லைன்' முறையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்கள் மட்டுமல்லாது, பழைய திட்டங்களில் விற்காமல் உள்ள வீடுகளுக்கும், 'ஆன்லைன்' முறையில் மட்டுமே, ஒதுக்கீடு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
