தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வீட்டு காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாதா? வதந்தியை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

வீட்டு காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாதா? வதந்தியை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

வீட்டு காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாதா? வதந்தியை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

1


ADDED : ஆக 11, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2026 07:37 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'உண்மை சரிபார்ப்பு பணியை முடிக்காவிட்டால், வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை தொடர்ந்து முன் பதிவு செய்ய முடியாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம்' என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகுதியான பயனாளிகளுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்ய, காஸ் சிலிண்டர் பயனாளியின் உண்மைதன்மையை சரிபார்க்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு, பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, குடும்பத்தில் சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர், தனக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் காஸ் ஏஜன்சிக்கு சென்று, விரல் ரேகை பதிவு செய்து, 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில், 2.40 கோடி வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்களில், 15 சதவீதம் பேர் உண்மை சரி பார்ப்பு பணியை முடிக்காமல் உள்ளனர். அவர்கள், அந்த பணியை வரும், 16ம் தேதிக்குள் முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'உண்மை சரிபார்ப்பு பணியை, வரும் 16ம் தேதிக்குள் முடிக்கவில்லை எனில், சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது; வணிக சிலிண்டர் விலையில் வீட்டு சிலிண்டர் கிடைக்கும்' என்ற தகவல்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இது, வாடிக்கையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, வாடிக்கையாளர்கள் கூறியதாவது:

ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் காஸ் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கு, 'வீட்டு கட்டணத்தில் சிலிண்டர் பெற, உண்மை சரிபார்ப்பு பணியை முடித்திருக்க வேண்டும். வரும், 16ம் தேதிக்குள் செய்ய தவறினால், வீட்டு கட்டணத்தில் சிலிண்டர் பெற தகுதியற்றவர்களாகி விடுவீர்கள். விரைவில் அந்த பணியை முடிக்கவும்' என, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உண்மை சரிபார்ப்பு பணி செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால், அந்த பணியை முடிக்கவில்லை எனில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது, வணிக சிலிண்டர் விலையில் வாங்க வேண்டியிருக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us