பிரதமர் கோவிலுக்கு செல்வது எப்படி விதீமீறல் ஆகும்: எல்.முருகன் கேள்வி
பிரதமர் கோவிலுக்கு செல்வது எப்படி விதீமீறல் ஆகும்: எல்.முருகன் கேள்வி
ADDED : மே 30, 2024 02:00 PM

சென்னை: பிரதமர் தியானம் செய்ய கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறல் ஆகும்என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.
கன்னியாகுமரியில் 3 நாட்கள் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறல் ஆகும். எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தில் உள்ளன. எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து விஷயத்திலும் கருத்து சொல்லக்கூடாது. பிரதமர் தியானத்தை யாரால் எப்படி தடுக்க முடியும்.
தமிழகத்தில், ஏராளமான கோயில்களை புனரமைப்பு, கும்பாபிஷேகம் ஆகியனவற்றை ஜெயலலிதா செய்துள்ளார். ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். 370 வது சட்டப்பிரிவை எப்போது நீக்கப்போகிறீர்கள் என ராஜ்யசபாவில் பேசி உள்ளார். ஹிந்துத்வா மீதும், ஆன்மீகம் மீதும் ஜெயலலிதா நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார்.
ஒடிசா அரசியல் பற்றி பேசும் போது பொய்யான தகவல், பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். முதல்வரை இயக்குவது ஒரு அதிகார. அவர் தவறான செயல்களை செய்து கொண்டுள்ளார். அதனை எடுத்துச் சொல்கின்றனர். அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.