பிரதமர் விழா மேடையில் பா.ஜ., தலைவர் எப்படி? தமிழக காங்கிரஸ் கேள்வி
பிரதமர் விழா மேடையில் பா.ஜ., தலைவர் எப்படி? தமிழக காங்கிரஸ் கேள்வி
UPDATED : அக் 11, 2026 09:53 PM
ADDED : அக் 11, 2026 09:16 PM
சென்னை: 'பிரதமர் மோடி பங்கேற்ற, மத்திய அரசு விழா மேடையில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், எந்த புரோட்டோகாலில் உட்கார அனுமதி அளிக்கப்பட்டது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர், வெளியிட்ட, 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:
சென்னையில், பிரதமர் மோடி தலைமையில், அடிக்கல் நாட்டு விழாக்கள், திறப்பு விழாக்கள் நேற்று நடந்தன. பிரதமர் பங்கேற்று விழா மேடையில், எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத, எம்.எல்.ஏ.,வோ, எம்.பி.,-யாகவோ கூட இல்லாத, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், எப்படி அமர்ந்திருந்தார்?
பிரதமருடன், எந்த 'புரோட்டோகால்' வாயிலாக நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. இது, மத்திய அரசின் விழா. இதற்கென சில 'புரோட்டோகால்' விதிமுறைகள் உள்ளன.
உள்ளூர் எம்.எல்.ஏ., இருக்கலாம்; அமைச்சர்கள் இருக்கலாம்; உள்ளூர் எம்.பி., இருக்கலாம். இதுதான் 'புரோட்டோகால்'. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில், சாத்துார் தொகுதியில் தோல்வி அடைந்தவர் நயினார் நாகேந்திரன். அவரை எப்படி, மேடையில், பிரதமர் மோடி அமர வைக்கிறார் என தெரியவில்லை.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
