உள்ளடக்கத்திற்கு செல்ல

'டெண்டர்' வெளியிடும் முன்பே முதல்வர் அறை பணிகள் எப்படி?
'டெண்டர்' வெளியிடும் முன்பே முதல்வர் அறை பணிகள் எப்படி?
ADDED : ஆக 19, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
சென்னை தலைமைச்செயலக பிரதான கட்டடத்தில் இருந்த, முதல்வரின் அறையை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள், கடந்த மாதம் தொடங்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அப்பணிக்கான 'டெண்டர்' அண்மையில் தான் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 13ஆம் தேதி 'டெண்டர்' விளம்பரம் வெளியிடப்பட்டு, நான்கு நாட்கள் கழித்து, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களிலும், பணிக்கான மொத்த மதிப்பை குறிப்பிடவில்லை.
ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், 'ஊழலற்ற, நியாயமான மற்றும் வெளிப்படைத் தன்மையான ஆட்சிதான் எங்கள் இலக்கு' என, வீரவசனம் பேசி வரும் முதல்வருக்கான புதிய அறை மாற்றம் குறித்த டெண்டர்களிலேயே, வெளிப்படைத்தன்மை இல்லை. மேடைப்பேச்சில் மட்டு மே வெளிப்படைத்தன்மை என்ற சொல்லை பெயரளவில் பயன்படுத்தாமல், ஆட்சி நிர்வாகத்தில், செயல்படுத்த முதல்வர் விஜய் முன்வர வேண்டும்.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,
