தீபாவளி பட்டாசு வெடித்து எத்தனை பேருக்கு பாதிப்பு? கணக்கு சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தீபாவளி பட்டாசு வெடித்து எத்தனை பேருக்கு பாதிப்பு? கணக்கு சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ADDED : அக் 31, 2024 04:46 PM

சென்னை: சென்னையில் 7, தஞ்சாவூரில் 6, மதுரையில் 5 மற்றும் திருச்சியில் 3 பேர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்புகள் வழங்கினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அவர் கூறியதாவது: சென்னையை பொறுத்தவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 7, தஞ்சாவூரில் 6, மதுரையில் 5 மற்றும் திருச்சியில் 3 பேர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து ஏற்கெனவே வீடு திரும்பியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
82 பேர் காயம்!
தமிழகம் முழுவதும் இன்று மதியம் 12 மணி வரை பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே ஒரு தீ விபத்து ஏற்பட்டு அதில், 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. பட்டாசு அல்லாமல் மாநிலம் முழுவதும் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளது.