sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இந்த வாரம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான வார பலன்

/

இந்த வாரம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான வார பலன்

இந்த வாரம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான வார பலன்

இந்த வாரம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான வார பலன்


UPDATED : மார் 01, 2024 01:44 PM

ADDED : மார் 01, 2024 11:00 AM

Google News

UPDATED : மார் 01, 2024 01:44 PM ADDED : மார் 01, 2024 11:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (1.3.2024 முதல் 7.3.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்


கேது, சூரியன் நன்மையை வழங்குவர். திருச்செந்தூர் முருகனை மனதில் வழிபட வாழ்க்கை வளமாகும்.

அசுவினி: சனி பகவான் அஸ்தமனமாகி இருப்பதால் அவருடைய பார்வைகளால் உண்டான சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். லாப ஸ்தான சூரியனால் வியாபாரம் தொழிலில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சனி, ஞாயிறு அன்று செயல்களில் கவனம் தேவை.

பரணி: ஆறாமிடத்தில் கேது, பதினொன்றில் சூரியன் சஞ்சரிப்பதால் சங்கடம் விலகும். பொருளாதார நிலை உயரும், ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். போட்டியாளர் விலகிச் செல்வர். ஞாயிறு திங்கள் அன்று உங்கள் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.

கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்டிருந்த முயற்சி வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திங்கள் அன்று செயல்களில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்:

2.3.2024 அதிகாலை 4:26 மணி - 4.3.2024 காலை 11:25 மணி



ரிஷபம்


சுக்கிரன், சூரியன், புதன், ராகு நன்மைகளை வழங்குவர். விநாயகரை வழிபட வளமுண்டாகும்.

கார்த்திகை 2,3,4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உங்கள் செயல் லாபமாகும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு விருப்பம் நிறைவேறும். செவ்வாய் அன்று புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

ரோகிணி: ஜீவன ஸ்தானத்தில் சூரியன், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். செயல்களில் லாபம் தோன்றும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செவ்வாய், புதனில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்.

மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். புதன் அன்று செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்:

4.3.2024 காலை 11:26 மணி - 6.3.2024 மாலை 4:06 மணி



மிதுனம்


சுக்கிரன், புதன், குரு நன்மைகளை வழங்குவர். குரு பகவானை மனதில் எண்ணி வழிபட வளம் உண்டாகும்.

மிருகசீரிடம் 3,4: தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல்களில் லாப நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாழன் அன்று எதிர்பாராத சங்கடம் தோன்றும்.

திருவாதிரை: குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் முயற்சிகளை வெற்றியாக்கும். வருமானத்தை அதிகரிக்கும், பொருளாதாரத் தடைகளை விலக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுப செயல் நடக்கும். வியாழன் விழிப்புணர்வு அவசியம்.

புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல் படுவதால் வியாபாரம், தொழிலில் லாபம் காண முடியும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும், ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். வழக்கு சாதகமாகும்.

சந்திராஷ்டமம்:

6.3.2024 மாலை 4:07 மணி - 8.3.2024 இரவு 7:15 மணி



கடகம்


கேது, சந்திரன் நன்மைகளை வழங்குவர். மீனாட்சி அம்மனை மனதில் எண்ணி வழிபட சங்கடம் தீரும்.

புனர்பூசம் 4: முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செயல் வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர்.உங்கள் முயற்சி லாபமாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்பாலினரிடம் விலகி இருப்பது நல்லது.

பூசம்: உங்கள் நட்சத்திர நாதன் அஸ்தமனம் அடைந்திருப்பதால் சங்கடம் நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சந்திரனின் சஞ்சார நிலைகளால் பணவரவில் ஏற்பட்ட இழுபறி நிலை மாறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

ஆயில்யம்: உங்கள் ராசிநாதனும், மூன்றாமிட கேதுவும் வாரம் முழுவதும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்


செவ்வாய், புதன் குரு நன்மைகளை வழங்குவர். அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்க்கை வளமாகும்.

மகம்: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் செவ்வாயால் முயற்சி வெற்றியாகும். செயல்களில் லாபம் காண்பீர். நினைத்ததை சாதிப்பீர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பூரம்: சனி பகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நண்பர், வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை நீங்கும். வரவு அதிகரிக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சி ஆதாயமாகும்.

உத்திரம் 1: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் செயல் லாபமாகும். விருப்பம் நிறைவேறும். சங்கடம் நிவர்த்தியாகும். எதிரி விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

கன்னி


சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவர். வராகியை வழிபட வாழ்க்கை வளமாகும்.

உத்திரம் 2,3,4: ராசிக்குள் கேது, ஏழில் ராகுவால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனையும் பயமும் தோன்றும். ஆசை அதிகரிக்கும். நட்புகளால் சில சங்கடம் தோன்றும். உங்கள் லாபாதிபதி சந்திரனின் சஞ்சார நிலைகளால் எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.

அஸ்தம்: ஆறாமிடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். எண்ணம் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும்.

சித்திரை 1,2: குரு பகவானின் பார்வை குடும்ப, தன ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வரவு அதிகரிக்கும். உங்கள் முயற்சி நிறைவேறும். ராகு கேதுவால் உண்டாகும் பாதிப்புகளை சமாளித்து லாபம் காண்பீர்கள்.

துலாம்


ராகு, புதன், குரு நன்மையை வழங்குவர். பிரத்தியங்கிராவை வணங்கி வர வளம்கூடும்.

சித்திரை 3,4: ராகுவின் சஞ்சார நிலையால் ஆற்றல் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வழக்கு சாதகமாகும். வேலைக்காக முயற்சித்தவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

சுவாதி: ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். விருப்பம் பூர்த்தியாகும். செயல்களில் வேகம் உண்டாகும். மற்றவரால் செய்திட முடியாத வேலைகளை செய்து முடிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

விசாகம் 1,2,3: ஆறாமிடத்தில் புதன், ராகு. ஏழாமிடத்தில் குரு சஞ்சரிப்பதால் செயல்களில் ஆதாயம் தோன்றும். தடைப்பட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். உத்தியோகஸ்தர்கள் நிலை உயரும். ஒருசிலர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்.

விருச்சிகம்


சுக்கிரன், செவ்வாய், கேது, நன்மையை வழங்குவர். ஆபத்சகாயேஸ்வரரை வழிபட சங்கடம் தீரும்.

விசாகம் 4: கேது பகவானின் சஞ்சாரநிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். திட்டமிட்ட செயல் வெற்றியாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

அனுஷம்: உங்கள் ராசியாதிபதி மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

கேட்டை: குருவின் பார்வைகளாலும், கேது, செவ்வாயின் சஞ்சார நிலைகளாலும் செயல்களில் வேகம் தோன்றும். உங்கள் முயற்சி வெற்றியாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

தனுசு


சுக்கிரன், சூரியன், புதன், குரு நன்மைகளை வழங்குவர். குலதெய்வ வழிபாடு குறை போக்கும்.

மூலம்: கடந்த வார சங்கடம் விலகும். சூரிய பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல் வெற்றியாகும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். முயற்சி வெற்றியாகும்.

பூராடம்: உங்கள் நட்சத்திரநாதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி நீங்கும். வருவாய் அதிகரிக்கும். மூன்றாமிட சூரியனால் உத்தியோகத்தில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

உத்திராடம் 1: கடந்த வாரங்களில் இருந்த நெருக்கடி விலகும். சுக்கிரன், சூரியன்,குரு சஞ்சார நிலைகளால் செல்வாக்கு உயரும், எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உத்தியோகத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம், தொழிலில் இருந்த பாதிப்பு விலகும்.

மகரம்


சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். ஈஸ்வரனை வழிபட சங்கடம் விலகும்.

உத்திராடம் 2,3,4: ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரனால் பொருளாதார நிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மூன்றாமிட ராகு முயற்சிகளை வெற்றியாக்குவார். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும்.

திருவோணம்: உங்கள் முயற்சி இந்த வாரத்தில் வெற்றியாகும். குருவின் பார்வைகளால் வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். வரவு அதிகரிக்கும். செயல்களில் ஆதாயம் தோன்றும். இதுவரை தடைப்பட்டு வந்த செயல் நடக்கும்.

அவிட்டம் 1,2: சனி பகவான் அஸ்தமனம் ஆகியிருப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் உண்டான நெருக்கடி விலகும்.

கும்பம்


சுக்கிரன், புதன், சந்திரன் நன்மைகளை வழங்குவர். காமாட்சி அம்மனை வழிபட வளம் உண்டாகும்.

அவிட்டம் 3,4: உங்கள் ராசிநாதன் அஸ்தமனமாகி இருப்பதால் நெருக்கடி விலகும். ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. லாப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சதயம்: ராசிக்குள் சூரியன், இரண்டில் ராகு, எட்டில் கேது, பனிரெண்டில் செவ்வாய் சஞ்சரித்தாலும் குருவின் பார்வைகளால் சங்கடம் போகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். ஆதாயம் அதிகரிக்கும்.

பூரட்டாதி 1,2,3: இந்த வாரத்தில் நீங்கள் திட்டமிட்டு செயல்படும் செயல்களில் மட்டும் நன்மை உண்டாகும். சுக்கிரனின் சஞ்சார நிலையும், குருவின் பார்வைகளும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

மீனம்


குரு, செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வணங்கி வர வாழ்க்கை வளமாகும்.

பூரட்டாதி 4: தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ராசியாதிபதி குரு சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் நிதானம் இருக்கும். யோசித்து செயல்படுவீர். வருமானம் அதிகரிக்கும். சனி அஸ்தமனமாகி இருப்பதால் சங்கடம் விலகும்.

உத்திரட்டாதி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் பண நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

ரேவதி: விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசுவழியில் சில நெருக்கடி தோன்றும். லாப செவ்வாயால் உங்கள் முயற்சி லாபமாகும். இரண்டாமிட குருவால் பணவரவு அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். வெள்ளிக்கிழமை செயல்களில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்:

28.2.2024 இரவு 7:01 மணி - 2.3.2024 அதிகாலை 4:25 மணி








      Dinamalar
      Follow us